Editorial / 2026 மே 06 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 மே மாதம் 05 ஆம் திகதி, தனது அன்றாட கடமைப் பதிவேட்டில் (Daily Report Book) தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குறித்துக் குறிப்பிட்டுள்ள அவர், தனது சீருடை மற்றும் அதற்குரிய உபகரணங்களைப் பொலிஸ் நிலையத்திலேயே வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
பிட்டிகல, இடிப்பலேகொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இந்த உத்தியோகத்தர், 2025 ஜூன் மாதம் 08 ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்தில் பணியில் இணைந்துள்ளார். அவர் 2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் பயாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்ததாகப் பொலிஸார் மேலதிகமாகத் தெரிவித்துள்ளனர்.
22 minute ago
33 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
46 minute ago
50 minute ago