2021 மே 06, வியாழக்கிழமை

கடமையிலிருந்த பொலிஸை தாக்கிய சாரதி கைது

Editorial   / 2021 ஏப்ரல் 14 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், குருந்துகஹ- ஹெத்தெக்ம நுழைவுப் பாதையில் கடமையிலிருந்து பொலிஸ் அதிகாரியொருவரைத் தாக்கிய காரின் சாரதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) குறித்த நுழைவுப் பாதையூடாக கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக, காரின் சாரதியொருவர் முயற்சித்ததாகவும், இதன்போது  சாரதி ஆசனப்பட்டியை அணியாமைக் காரணமாக, அது குறித்து சாரதியை பொலிஸ் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்தே கடமையிலிருந்து பொலிஸ் அதிகாரியை சாரதி தாக்கியதால், சாரதியை கைதுசெய்த பொலிஸார், அவரை எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தப் பின்னர். ஆவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .