Freelancer / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கடலட்டை பண்ணைகள் வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும் அட்டப்பண்ணையும் செய்யாதவர்கள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாழில் முறையான அனுமதிகளை உரிய திணைக்களங்கள் ஊடாக பெற்றே அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளோம். அட்டப்பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மக்களுக்கு பண்ணைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
28 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
1 hours ago