Editorial / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக, இனம், மதம் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டிஇ அனைவரையும் அணிதிரள வேண்டுமென, அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
தமிழ்த் தலைவர்கள், வெறுமனே கடிதம் எழுதுவதை விடுத்து, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் குதிக்க வேண்டுமென அக்குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
யாழ். ஊடக அமையத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், அரசியல் கைதிகளது விடுதலைக்காகப் போராடும், 'குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்' பிரதிநிதிகள் சகிதம், அரசியல் கைதிகளது குடும்பத்தவர்கள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
புதிய மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 54 அரசியல் கைதிகளில், 15 பேர் வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
'சிறையில் உச்சக்கட்ட பாதுகாப்பின் மத்தியில், தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளுக்கு, எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதென்பது தெரியவில்லை. திட்டமிட்டு அது பரப்பப்பட்டதா என்ற சந்தேகமும் எம்மிடமுள்ளது' என்றனர்.
'கொரொனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும், படையினரது கட்டுப்பாட்டின் கீழுள்ள சிகிச்சை நிலையங்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது' என்றனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வோர் அரசியல் கைதியும் பத்து முதல் 25 வருடங்கள் வரையில், சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர்கள், அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில், குரல் எழுப்பிய போதும், அதைக் கண்டுகொள்ளாத அரசாங்கம்இ மறுபுறம் 8 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாகக் கூறி, 7ஆயிரத்து 400 பேரை ஒருவாரத்துக்குள் விடுவித்துள்ளது. ஆனால், அவர்களுள் ஓர் அரசியல் கைதி கூட உள்ளடங்கவில்லை' என்றும் தெரிவித்தனர்.
ஞானசார தேரர் கூட, அரசியல் கைதிகளது விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது, அரசியல் கைதிகளது அவல வாழ்வை, நேரடியாகக் கண்டமையே, அதற்கான காரணமாக இருக்கலாம் என்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago