Freelancer / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா பிறேமானந் (வயது 58) என்ற வர்த்தகராவார்.
நேற்று வியாழக் கிழமை பிற்பகல் 1 .15 மணியளவில் யாழ். நகருக்கு சென்ற நிலையில், வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
48 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
6 hours ago
6 hours ago
7 hours ago