2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கணக்கறிக்கைக்கு எதிரான யோசனை முன்வைப்பு

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவால் முன்​வைக்கப்படவுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிரான யோசனையொன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால், சபையில் சற்றுமுன்னர் முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கருணாநாயக்க எம்.பி, அரசாங்கத்தின் எந்தவொருச் செலவையும் பொறுப்பேற்பதற்கு, பிரதமர் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்றுக் கூறினார்.

இதை, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஆமோதித்தார். இதற்கு எதிராக கருத்துகளை, மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, தற்போது முன்வைத்து வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .