Freelancer / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் ஒருவர் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.
இந்தநிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)
42 minute ago
46 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
55 minute ago
1 hours ago