2025 ஜூலை 31, வியாழக்கிழமை

காணாமல் போன மீனவர்களின் வீடுகளுக்குச் சென்ற சஜித்

Freelancer   / 2025 ஜூலை 29 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பகுதியில் அமைந்து காணப்படும் வெல்ல கொலனி பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பதாக விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலுக்குச் சென்ற 3 மீன்பிடி இயந்திர படகுகளில் ஒரு படகு பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக காணாமல் போயுள்ளதுடன், அதில் பயணித்த இரு மீனவர்களும் காணாமல் போயுள்ளனர். 

இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு பல முறை தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பத்து நாட்களுக்குப் பிறகும், கிராம மக்களினது தேடுதல் முயற்சியால் காணாமல் போன ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அடுத்த மீனவரின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (28) சிலாபம் பகுதிக்கு விஜயம் செய்த தருணம் குறித்த விடயமறிந்து, காணாமல் போன மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து விடயங்களை நேரில் கேட்டறிந்தார். 

இச்சமயம் விமானப்படைத் தளபதியைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, காணாமல் போன அடுத்த மீனவரைத் தேடும் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டர் மூலமான உதவியைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த விமானப்படைத் தளபதி, காணாமல் போன மீனவரைத் தேடுவதற்காக உடனடியாக ஹெலிகாப்டரை அனுப்பி தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். 

இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி மற்றும் சித்ரால் பெர்னாண்டோ உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .