Janu / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பே பழைய நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஆண் பெண் இருவர், குறித்த பெண்ணுடைய கணவனின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் செவ்வாய்க்கிழமை (28) அன்று ஒருவர் உயிரிழந்ததாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாதம்பே பழைய நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய துஷார தில்ருக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சந்தேக நபரின் மனைவியுடன் சிறிது காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், சம்பவ தினத்தன்று இருவரும் மாதம்பே பழைய நகரப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் தங்கியிருந்த போது அந்த இடத்திற்கு வந்த சந்தேக நபர் தனது மனைவியை மற்றும் அவரது கள்ளக்காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago