Freelancer / 2024 மே 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, நெடுங்கேணி் - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபரின் மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அண்மைக்காலமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago