2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கணவரின் கணினியை ஆராய மனைவிக்கு தடை

Freelancer   / 2021 ஜூலை 14 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது.

தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது

மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது  பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்துள்ளார் என கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள அரச வைத்தியசாலையில் தான் வைத்தியராக கடமையாற்றுவதாகவும் தனது மனைவி வட மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் வைத்தியராகக் கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கல்கிஸை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி டி.எம்.கொடித்துவக்கு, கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தடையுத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X