Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் அரச காணியை அபகரித்து முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மாத கால அவகாசத்திற்குள் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், குடத்தனை பகுதியிலுள்ள அரச காணியை தனது சொந்தக் காணி என உரிமை கோரி, எல்லை மதில் அமைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவதானித்த ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள், அரச காணிகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து, பருத்தித்துறை பிரதேச சபையினால் குறித்த கட்டிடத்திற்கு எதிராக 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) கடிதம் ஒட்டப்பட்டது. இருப்பினும், போலி காணி உரிமையாளர் அந்த அறிவித்தலை கிழித்தெறிந்து சர்ச்சையை அதிகப்படுத்தினார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்து, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
தற்போது நிலவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம், 1979ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அரசு காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ள வெளியேற்றும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அரசு காணிகள் தனிநபர்களால் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் பிரதேச செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை குடத்தனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பூ. லின்ரன்

2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago