Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 04 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஹொங்கொங் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரபல பாடகர் பண்டித் அமரதேவவின் மரணம் குறித்து, பேரதிர்ச்சிக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ள பிரதமர், அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் என்னையும் எனது பாரியாரையும் சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே, பண்டித் அமரதேவவின் மரணம் அமைந்துள்ளது.
இலங்கையில் கடந்த பல தசாப்தங்கள், பண்டித் அமரதேவவின் அடையாளங்கள் பதியப்பட்ட ஆண்டுகளாகும். தற்காலத்திலும் எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும் வகையிலான சேவைகளை, அவர் இசைத்துறைக்கு ஆற்றியுள்ளார். அவரது இசை, என்னையும் எனது குடும்பத்தையும் மிகவும் பற்றிக்கொண்டுள்ளது. அவரது ஆத்மா மோட்சமடைய, நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன்” என்று, அந்தப் பதிவில், பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டித் அமரதேவவின் இழப்பு குறித்து, ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலைத்துரையைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும் தங்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர். தமிழ்மிரர் சார்பில், நாங்களும் எங்களது அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago