2021 ஜூன் 21, திங்கட்கிழமை

கைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு

R.Maheshwary   / 2021 மே 16 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறையிலிருக்கும் கைதிகளுடன் அவர்களது உறவினர்கள் வீடியோ தொழிநுட்பம் ஊடாக தொடர்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளை உறவினர்கள் பார்வையிடும் நடவடிக்கையானது, கொரோனா பரவலையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், குறித்த வீடியோ தொழிநுட்ப வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷhர உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிறைச்சாலை திணைக்களத்தின் www.prisons.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து, தம்மை பதிவு செய்துகொள்பவர்கள், சிறையில் இருக்கும் கைதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றார்

.இவ்வாறு வீடியோ தொழிநுட்பம் ஊடாக கதைப்பதற்கு, வாரத்துக்கு 15 நிமிடங்கள் கைதியொருவருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .