2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

’கொத்தல ஹிம்புட்டு’ கடத்தல் : சீனப்பிரஜை கைது

Janu   / 2026 மார்ச் 31 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக புகழ்பெற்ற இலங்கை தேயிலை பிராண்டுகளின் பொதிகளை பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் 'கொத்தல ஹிம்புட்டு' (Salacia Reticulata) மூலிகையை சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய சீன சுற்றுலா பயணியா ஆவார். அவர் செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை 1:40 மணியளவில் சீனாவிலுள்ள குன்மிங் (Kunming) நகருக்கு புறப்படவிருந்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MU-714 ரக விமானத்தில் பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

விமான நிலைய வெளியேறும் முனையத்தில் கடமையிலிருந்த சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயண பொதிகளை சோதனையிட்டபோது, இலங்கை தேயிலை நிறுவனங்களின் இலச்சினைகளை கொண்ட பொதிகளுக்குள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் எடையுடைய 'கொத்தல ஹிம்புட்டு' மூலிகையினை மீட்டுள்ளனர்.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் விதிகளுக்கமைய, 'கொத்தல ஹிம்புட்டு' என்பது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடை செய்யப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 டி.கே.ஜி. கபில  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .