Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பிரதேசங்களில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த கொலை வழக்குகளில் நான்கு நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய வியாழக்கிழமை (02) தீர்ப்பை வழங்கினார்.
1998-ஆம் ஆண்டில் நானுஓயா, பொலிஸ் பிரிவில் நிகழ்ந்த கொலைக்காக 47 வயதுடைய ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டில் பட்டிப்பொலவில் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 55 வயதுடைய ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 1990-ஆம் ஆண்டில் பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 64 வயதுடைய மற்றும் 62 வயதுடைய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago