2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காதலியின் வாயில் வெடிவைத்த காதலன்

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலி வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலதில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த  ரக்‌ஷிதா (வயது 20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே, ரக்‌ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், ரக்‌ஷிதாவும் அவரது கள்ளக்காதலனான சித்தராஜுவும் திங்கட்கிழமை (25) அன்று ஹிர்யா கிராமத்தில் உள்ள லாட்ஜிக்கு சென்றுள்ளனர். 

லொட்ஜில் வைத்து ரக்‌ஷிதாவுக்கும் சித்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சித்தராஜு தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்‌ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்துள்ளார். 

இதில், ரக்‌ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, கள்ளக்காதலன் சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். 

அறையில் வெடிசத்தம் கேட்டு லொட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த சித்தராஜுவை பிடித்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், சித்தராஜுவை கைது செய்துள்ளனர். 

மேலும் லொட்ஜ் அறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரக்‌ஷிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X