2026 மே 02, சனிக்கிழமை

கதிர்வீச்சு அறையில் பூட்டப்பட்ட இரண்டு தாதியர்

J.A. George   / 2021 மார்ச் 22 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகரகம வைத்தியசாலையின் கதிர்வீச்சு அறையில் வைத்து  இரண்டு தாதியர்கள் பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பாக கதிரியக்க நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாதியர்கள் மகரகம  பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு கதிரியக்க நிபுணர்கள் மீது குறித்த தாதியர்கள் முறைப்பாடு செய்த நிலையில் அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .