Freelancer / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் நேற்று நண்பகல் வேளையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடிய கைதிகள் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர்கள் எனவும், அவர்கள் 29 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியமைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைது செய்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் மற்றும் தப்பியோடும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்றைய சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (a)
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago