Kanagaraj / 2015 நவம்பர் 21 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டம் இந்த நாட்டின் எதிர்கால அபிவிருத்தியில் உந்து சக்தியாக அமைந்துள்ளதோடு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் ராம் நற்பணி மன்றத்தின் தலைவருமான சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்.
வரவு- செலவுத்திட்டத்தில் ஏழைய எளிய மக்களின் வாழ்வாதரத்தை கவனத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படடுள்ளமையை முழுமையாக வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு-செலவுத்திட்டம் திட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இருள் சூழ்ந்திருந்த இந்;த நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மறுமலர்ச்சியை ஏற்படத்தியது. அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்பட்டு ஸ்;திரத்தன்மையான பொருளாதாரத்துடன் நாடு வளர்ச்சிப்பாதையில் மிளிர வேண்டும் என்ற ஓர் இலக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் அமைந்தது.
இக்கூட்டு அரசாங்கம் தனது முதல் வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த வரவு- செலவுத்திட்டமானது கடந்த அரசாங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத்திட்டங்களிலிருந்து முற்றாக வேறுபட்டே காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதரத்தில் அதீத செல்வாக்கச் செலுத்தும் விடயங்களான உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி தீர்வை, அந்நிய முதலீடுகள், தொழில் முயற்சிகளுக்கான சலுகைகள், கடன் வசதிகள், சம்பள அதிகரிப்பு, ஏற்றுமதி தீர்வை, சந்தைவாய்ப்பு , தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் பொருளாதார வலயங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் கல்வி, சுகாதாரம், அத்தியாவசியப் பொருட்களுக்கான விசேட விலைகள், என்பவற்றிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கான விசேட திட்டங்களும் அறிமுகப்படுத்துள்ளன. குறிப்பாக ஒரு இலட்சம் வீடமைக்கும் திட்டம், மாடிவீட்டு திட்டங்களுக்கான சலுகைகள் , மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் என்பன மக்களை மட்டுமே மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.
அத்துடன் ஏழை மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் விசேட கவனம் செலத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமான இது வரவேற்கப்படவேண்டியதொன்றாகின்றது.
மேலும் குறித்த வரவு- செலவுத்திட்டத்தின் மொத்த வருமானம் 2047மில்லியன் ரூபாவாக காணப்படுவதோடு செலவீனம் 2787மில்லியன் ரூபாவாக உள்ளது. துண்டுவிழும்தொகை 740 மில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. கடந்த கால வரவு- செலவுத்திட்டங்களில் இவ்வாறு எந்தவிதமான நிலைமைகளும் காணப்பட்டிருக்கவில்லை.
ஆகவே, தேசிய அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள முதலாவது வரவு-செலவுத்திட்டமானது மக்களை மட்டுமே மையப்படுத்தியதாகவும் பொருளதாரத்தை கட்டியெழுப்புதவற்கான இலக்குநோக்கியுமே அமைந்துள்ளது. இவ்வாறான வரவு- செலவுத்திட்டமானது இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக காணப்படுவதோடு அபிவிருத்தி வளர்ச்சிக்கான உந்துசக்தியாகவுமுள்ளது என்றார்.
7 hours ago
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
28 Oct 2025
28 Oct 2025