Editorial / 2026 ஜனவரி 20 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஓர் ஆபாச வீடியோ லீக் ஆனதால் அதிகாரியின் மானம் கப்பலேறிய சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது,
கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு பொலிஸ் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், பெண்கள் விஷயத்தில் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா? என்ற அதிர்ச்சியில் அம்மாநில காவல்துறை வட்டாரம் உள்ளது. கைதாகி உள்ள இந்த அதிகாரி யார் தெரியுமா? இவரது பெயர் ஏற்கனவே ஒரு நடிகையின் கேஸில் அடிபட்டது நினைவிருக்கா? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான "வாகா" என்ற படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார்.
கடந்த வருடம் துபாயிலிருந்து பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், உடலெங்கும் தங்க நகைகளை அணிந்து வந்ததால் அதிகாரிகளின் சந்தேகத்திற்கு உள்ளானார். விமான நிலைய சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாக சுமார் 14.80 கிலோ கிராம் தங்கம் சட்டவிரோதமாக இந்த நடிகை கடத்தி வந்தது உறுதியானது.
அப்போது இந்த நடிகையை தப்பிக்க சில அதிகாரிகள் மூலம் முயற்சி செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்தபோது, தன்னை கர்நாடகா டிஜிபியின் மகள் என்று கூறி, பொஸாரை காவலுக்கு வரும்படியும் அழைத்துள்ளார்.. இது மேலும் பொலிஸாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது..
நடிகையை விசாரணைக்கு உட்படுத்தியபோதுதான், கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு பொலிஸ் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள்தான் நடிகை ரன்யா ராவ் என்பது தெரியவந்தது..
அதுமட்டுமல்ல, நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்த போது விமான நிலையத்திற்கு, பொலிஸ் வாகனத்தை டிஜிபியான அவரது அப்பா ராமச்சந்திர ராவ் அனுப்பி வைத்திருந்தார். இதனால் தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்யாமல் பலமுறை அனுப்பி வைத்துள்ளனர்.
தன்னுடைய தொடையில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தார். வெறும் 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய்க்கு சென்றிருந்ததுதான் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை தந்தது.
கோடிக்கணக்கான நகைகளை நடிகை அணிந்தும், துணிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்தும் கடத்தி வருகிறார் என்றால், இந்த கடத்தல் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் DRI அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மகளின் கள்ளக்கடத்தலுக்கு தந்தையே உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார் மாதக்கணக்கில் அவருக்கு பணி ஒதுக்கப்படாமல் இருந்தது, அதன் பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டிஜிபியாக ராமச்சந்திர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியதால் மாநில பொலிஸ் டிஜிபி என்ற தலைமை பொறுப்புக்கான வாய்ப்பு இருந்தும் அது அவருக்கு அப்போது கையை விட்டு போய்விட்டது நினைவிருக்கலாம்..
மொத்தம் 3 ஆபாச வீடியோக்கள் உள்ளன.. இதில், 2 வீடியோக்களில் டிஜிபி ராமச்சந்திர ராவ், யூனிபார்மிலேயே தன்னுடைய லீலையை அரங்கேற்றி உள்ளார்.. ஆனால் 3 வீடியோக்களில் உள்ள பெண் ஒருவரா? அல்லது வேறு வேறு பெண்களா தெரியவில்லை.. அந்த பெண்களை யாரும் பலவந்தப்படுத்தவில்லை, அவர்களாகவே விருப்பப்பட்டு அதிகாரியுடன் பழகுவது போல தெரிகிறது.
இப்படி ஒரு வீடியோ வெளியானதுமே இதனை ராமச்சந்திர ராவ் மறுத்தார். பிறகு 8 வருட பழைய வீடியோ என்றார். பிறகு அந்த வீடியோக்கள் எதுவுமே உண்மை இல்லை, சித்தரிக்கட்டவை, யாரோ சதி செய்கிறார்கள் என்றார்.. இப்படி மாற்றி மாற்றி பேசிய நிலையில், அவரை துறை ரீதியாக இடைநீக்கம் செய்துள்ளனர்..
இன்னும் 4 மாதங்களில் ரிடையர் ஆக போகிறாராம் டிஜிபி ராமச்சந்திர ராவ்.. ஆனால் அதற்குள் இப்படியொரு ஆபாசத்தில் சிக்கி உள்ளது காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .