R.Maheshwary / 2021 மார்ச் 16 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்துக்குரிய மக்கள் பிரதிநிதியை நியமிக்காமை ஜனநாயக விரோத செயலெனத் தெரிவித்த நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ், மக்கள் ஆணையை மதிக்காமல் ஜனநாயகம் தொடர்பான கருத்துகளை ஐக்கிய தேசிய கட்சி முன்வைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றார்.
தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில், நேற்று (15) கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாற தெரிவித்தார்.
குறிப்பாக நாடளாவிய ரீதியில், ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகளுக்கு அமைய, அந்தக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
கட்சிக்குள் இருக்கும் உட்பூசல் காரணமாக, பிரதிநிதியொருவரை நியமிக்காமல் இருக்கிறது. இச்செயற்பாடானது, முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகுமெனத் தெரிவித்த அவர், அதேபோல மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கருத்தை முன்வைக்கவோ, அது தொடர்பான ஆயத்தங்களில் ஈடுபடவோ ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றார்.
41 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
01 May 2026