Freelancer / 2023 ஜனவரி 14 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமால் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை உள்ளிட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய இடங்களை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜேவர்தனவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. R
6 minute ago
27 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
48 minute ago
1 hours ago