2025 ஜூலை 05, சனிக்கிழமை

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் 11 பேர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நீதிமன்ற வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.  

பஸ் பொட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு, கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதனால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், பாதாள உலகக் கோஷ்டியின் அங்கத்தவர்களா? அவர்களினால் ஏதாவது குற்றங்கள் புரியப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 11 பேரிடமிருந்து விரலடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .