Niroshini / 2021 மே 06 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நிதியை நிதி அமைச்சு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கொரோனா பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எந்தவொரு நிதியையும், நாட்டின் வேறெந்தத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப் போவதில்லை என உறுதியளித்தார்.
சபாநாயகர் தலைமையிலான நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய அவர், நாடு முழுவதிலும் உருவாக்கப்படவுள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கான நிதி, வரவு - செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா நிதியத்திலிருந்து இதற்கான நிதி பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், மேற்படி உடற்பயிற்சி நிலையத் திட்டத்துக்கு, தற்போது செலவு செய்யப் போவதில்லை என்றும், அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
6 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago