Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வில்பட்டு தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
ரனோரவ மீகஸ்தெனியா பகுதியில் குக்குல்கடுவ வனவிலங்கு பீட்டு அலுவலக அதிகாரிகள் நடத்திய விரைவான சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு அதிகாரிகள், கர்ப்பிணி மானை கொன்று கசாப்பு செய்ய ஒரு குழு தயாராகி வருவதைக் கண்டனர், அதன்படி, உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த சந்தேக நபர்களில் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தப்பிச் சென்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .