Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பினை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்க வேண்டும் என, புத்திஜீவிகள் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் மத்துமபண்டார, அரசியலில் ஆழத்துக்கு சென்று சபாநாயகர் ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக களனி பல்கலைக்கழக பேராசிரியல் ஆரியவங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜீத் பிரேமதாசவுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதாகவும், தற்போது கரு ஜயசூரியவுக்கு சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
10 minute ago
39 minute ago
9 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
39 minute ago
9 hours ago
10 May 2026