2025 ஜூலை 19, சனிக்கிழமை

கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Freelancer   / 2025 மே 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) மாலை கரையொதுங்கியது.

தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் உள்ளார்.  மேற்படி பெண்ணும் மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.

கடற்கரையில் சடலம் காணப்படுகின்றது என்று பருத்தித்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X