2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கற்குகையிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி- மாப்பாகந்த பிரதேசத்தில் கடந்த 5 நாள்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட, பாடசாலை மாணவனொருவன்  நேற்று மாலை கற்குகையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி- மாப்பாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 17 வயதுடைய மாணவன் என்றும், இவர் கடந்தாண்டு டிசெம்பர் மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனைக் காணவில்லையென நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டுக்கமைய, பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையிலேயே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .