2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்முனை போராட்டத்துக்கு 4000 பேர் வலுச்சேர்த்தனர்

Editorial   / 2024 மே 12 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி. சகாதேவராஜா

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளை கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடாத்தி வரும் போராட்டம் திங்கட்கிழமையுடன் (13)  ஐம்பது நாட்களை எட்டுகிறது.

அதையொட்டி  ஞாயிற்றுக்கிழமை (12) பாரியமனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.

ஊர்வலமாக சுமார்  4,000 பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால்  கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

4,000 பொது மக்கள் பங்கேற்ற பேரணி வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை அடைந்தனர். பதாதைகளை தாங்கிய வண்ணம் மிக நீண்ட நேரம் கோஷங்களை எழுப்பி மக்கள் வலம் வந்தனர்.

தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .