2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்விப் பொதுத்தராதர உ/த மாணவர்களுக்கு டெப்

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் டெப்களை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் இடம்பெற்ற, ஜேர்மன் வர்த்தகம் தொர்புடைய ஆசிய பசுபிக் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை ஒரு டிஜிட்டல் முறையிலான பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'நாட்டில் நாம் வைபை வலையமைப்பையும் உருவாக்கியுள்ளோம். தொழில்நுட்ப பிரிவில் தேர்ச்சி பெற்ற சிறப்பு பொறியியலாளர் எமக்கு தேவை. மேலும், தகவல் தொழில்நுட்பத்தை பயிற்சிவிக்கும் நிறுவனங்கள் எமக்கு தேவையாக உள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .