2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் செவ்வந்தி இருந்த இடத்தில் அதிகாரிகள்

Freelancer   / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் விசாரணையில் வெளிட்டு வருகின்றார்.

மேலும், கொலைக்குப்பின் இவருக்கு உதவிய பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொலைக்குப்பின் செவ்வந்தி பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கமைய கடந்த சனிக்கிழமை (18) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி, அந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள தெரிவிக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .