2025 மே 22, வியாழக்கிழமை

களவு கற்பித்த தாய்

Thipaan   / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயொருவர் தனது மகளுக்கு, களவெடுப்பதற்குக் கற்பித்துக் கொடுத்த சம்பவமொன்று களுத்துறை, இங்கிரியவில் உள்ள பாதணிக் கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சிறுமி, குறித்த பெண்ணின் மகளா அல்லது வேறுயாருமா என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சனக்கூட்டம் நிறைந்திருந்த அந்த பாதணிக்கடைக்கு, தாயும் மகளுமாக கடந்த 20 ஆம் திகதியன்று இருவர் வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணுடன் வந்த சிறுமி, இலாச்சியை திறந்து 55 ஆயிரம் ரூபாவை களவெடுத்துள்ளார். அவ்வாறு களவெடுக்கும் சம்பவம், கடையிலிருக்கும் சிசிடிவி கமெராவில் பதியப்பட்டுள்ளது.

சிசிடிவி கமெராவில் பதியப்பட்டுள்ள காட்சிகளின் பிரகாரம்,  அச்சிறுமியினால் இலாச்சியை ஒரே தடவையில் திறக்கமுடியவில்லை. இதன்போது குறித்த பெண், அந்த இலாச்சியை அரைவாசிக்கு திறந்துகொடுத்துள்ளார்.

அதன்பின்னர், மிகவும் தந்திரமான முறையில் இலாச்சியிலிருந்து அச்சிறுமி, பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

அச்சிறுமி, குறித்த பெண்ணின் மகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற இங்கிரிய பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X