2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

களியாட்ட விடுதி தாக்குதல்: விசாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Thipaan   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள இரவு களியாட்ட விடுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், தனியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, வெகுசன ஊடகத்துறை அமைச்சின் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யூனியன் பிளேஸிலுள்ள இரவு களியாட்ட விடுதியில், இடம்பெற்ற சம்பவத்துடன், உயர்நிலை அரசியல்வாதியொருவரின் மகன் மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .