Nirosh / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 'மொட்டு' கூட்டணியின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் என அறியமுடிகின்றது.
அவ்வாறான தீர்மானமொன்று எட்டப்படுமாயின், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் இராஜினாமா செய்வார் என்றும் அவரது கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுத் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், "கிழக்கு மாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு பிள்ளையான் ஒத்திசைவார்" என்றார்.
மாகாண சபைத் தேர்தல்களை 2022 முற்பகுதியில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago