Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தை பிறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, அந்த சிசுவை பிரசவித்த தாயும் அவரது குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளனர் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த பெண் வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் தரையில் முகம் குப்புறக் கிடந்ததாக கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவளுடைய மைத்துனரிடமிருந்து செய்தி வந்ததும், அவர்கள் வீட்டிற்குச் சென்று வீட்டைப் சோதித்தனர், அவளுடைய உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் இருப்பதைக் கண்டனர்.
இறந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை அந்த நேரத்தில் அவரது காலடியில் இருந்ததாகவும், குழந்தை தொப்புள் கொடியை வெட்டாமல் ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், மனைவியும் குழந்தையும் முச்சக்கர வண்டியில் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களைப் பரிசோதித்த பிறகு, அங்குள்ள மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
33 minute ago
45 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
6 hours ago
9 hours ago