Janu / 2025 மார்ச் 19 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானைகள் மத்தியில் சிக்கிய நபர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் காப்பாற்றப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இடம்பெற்றது.
சுமார் 50 க்கும் அதிகமான யானைகள், வயல் அறுவடையின் பின்னர் மேற்குறிப்பிட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உட்புகுந்து அங்கு புதிதாக முளைத்துள்ள புற்களை உண்டு வருவதுடன் சட்டவிரோதமான குப்பைக்கூளங்களும் நாடி வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை அறுவடை செய்யப்பட்ட வயல்வெளியில் மாடுகளை மேய்ப்பதற்காக காவலுக்கு சென்ற நபரை, திடீரென அங்கு சென்ற யானைகள் சுற்றி வளைத்து அவரை தாக்க முயன்றுள்ளன.
உடனடியாக செயற்பட்ட குறித்த நபர் அருகில் உள்ள உயரமான இடமொன்றில் ஏறியுள்ளார்.எனினும் யானைகள் அவரை விடாது துரத்தி தாக்க முயன்ற வேளை தகவலை அறிந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து வெடி பொருட்களை பாவித்து யானைக் கூட்டத்தை பின்வாங்க செய்ததுடன் ஆபத்தில் இருந்த நபரையும் மீட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது.
பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தழிவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

52 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago