Janu / 2025 மே 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளங்களில் பரவி வரும், ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியொருவர் மற்றும் ஒரு நபருக்கிடையில் சனிக்கிழமை (24) அன்று ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு பொலிஸ் அதிகாரியால் குறித்த நபர் தாக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ - மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஆண் மற்றும் பெண் ஒருவரை சோதனையிட சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கோகரெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட 1 பொலிஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026