Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திலீபன் தயாளினி (53) அவர்களின் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கொலைச் சம்பவத்தில் அவரது மருமகனான தினகர் திவாகர் என்பவருடன் சேர்ந்து, மகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய தயாளினி, பல ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுத் தனது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது இளைய மகளே இக்கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராகக் கருதப்படுகிறார்.
வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மகள், அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த தினகர் திவாகர் என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ளார். திவாகரின் உறவினர் ஒருவர் தயாளினியின் வீட்டில் வேலைக்கு வந்து சென்றதன் மூலமே இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தாயின் எதிர்ப்பையும் மீறி திவாகரைத் திருமணம் செய்த மகள், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதை அறிந்து மீண்டும் தாயுடன் வந்து வாழ்ந்துள்ளார். இதன்போது திவாகர் நள்ளிரவு வேளைகளில் தயாளினியின் வீட்டுக்குச் சென்று வெடிகளை வெடிக்கச் செய்தும், வன்முறையில் ஈடுபட்டும் அச்சுறுத்தி வந்துள்ளார். இது குறித்துப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தயாளினியும் அவரது மகளும் திவாகரினால் கடத்தப்பட்டதாகத் தெரிகிறது. மகளை அழைத்துச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட மோதலில் தயாளினி தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தயாளினியின் சடலம் சாவகச்சேரி, தனங்களப்பு காட்டுப் பகுதியில் வீசப்பட்டிருந்தது. பிரிந்து வாழ்ந்த மகள் எவ்வாறு மீண்டும் திவாகருடன் திருகோணமலைக்குச் சென்றார்? தாயின் சடலத்தை மறைப்பதில் மகளின் பங்கு என்ன? போன்ற மர்மங்கள் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
26 minute ago
46 minute ago
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
53 minute ago
3 hours ago