Editorial / 2025 ஜூலை 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதலுக்கு என்னங்க வயசு: 79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்
காப்பகத்தில் இருந்த போது, இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதற்காக சமூக நீதித்துறையிடம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் சமூக நீதித்துறை அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தது. அதன்படி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம் காதலிக்க வயது தடை இல்லை என்று எடுத்து காட்டியுள்ளது. மேலும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் தவித்து வந்த முதியவர்கள் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago