Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு- வவுணத்தீவு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பல கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதற்கமைய பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகார்கள் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலனாய்வு பிரிவின் தலைவர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்றும், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, எதிர்வரும் நாள்களில் சந்தேகநபர் குறித்த சகல தகவல்களையும் வெளிப்படுத்த முடியும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்களின் கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயயதுடைய நபரொருவர் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
2 hours ago