Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 23 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு - களுவன்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் இரண்டு பேர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர். பெண்ணொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகமாகச் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததையடுத்து இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை (23) அதிகாலை 3.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு சின்னஊறணியைச் சேர்ந்த காரின் சாரதியான 25 வயதுடைய ஜெயந்திர குமார் சஞ்சே மற்றும் மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த சிசிலியா பாடசாலை மாணவியான 15 வயதுடைய பிரதீபன் தமன்லினி ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இவரது தாய் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரின் சாரதியும் முன்ஆசனத்திலிருந்த சிறுமியும் மரணமடைந்துள்ளனர்.
இவர்கள் அமிர்தகழி கோயிலுக்குச்சென்ற பின்னர் களுவன்கேணியிலுள்ள தமது பன்றி வளர்ப்புப் பண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்ததையடுத்து அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்குச் சென்று அங்கிருந்த கொங்கிறீட் வேலிக்கட்டைகளை உடைத்துக்கொண்டு பெரிய மரமொன்றில் மோதியுள்ளது. இதனால் காரிலிருந்தவர்கள் வெளியே வீசப்பட்டிருந்தனர்.
கார் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. இவர்கள் ஆசனப்பட்டியை அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் உடனடியாக சடலங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதையடுத்து சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த ஏறூவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago