Janu / 2025 ஜூன் 03 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹியத்தகண்டிய - மஹியங்கனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (03) காலை பயணித்த கார் ஒன்று, ஹோபரியாவ ஸ்ரீ குணரதனாராமய விகாரைக்கு முன்பாக உள்ள நடைபாதை மீது பாய்ந்ததில், நடைபாதையில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மஹியங்கனையில் இருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
பாலர் பாடசாலை சென்று கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், ஒரு மாற்றுத்திறனாளியொருவர் மற்றும் பெண் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கிராந்துரு கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம், விபத்துக்கான காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago