Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு - காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,
கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மீட்பு பணிகளில் என்.டி.ஆர்.எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, இராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்.டி.ஆர்.எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .