Freelancer / 2025 ஜூன் 29 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சனிக்கிழமை (21) அன்று மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி, குரும்பைகட்டி, புலோலியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் இரண்டு தினங்களிற்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடிய அனுசயன் வயது இரண்டு என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
குழந்தையின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (a)
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago