2026 மே 09, சனிக்கிழமை

dd

கிளப் வசந்த படுகொலை: 20 பேருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2024 நவம்பர் 08 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம்  வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (7)  ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்தவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு ஏற்கனமே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேக நபர்களும், நீதிமன்ற உத்தரவின் கீழ் 03 மாத காலம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 05 சந்தேக நபர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .