2025 மே 22, வியாழக்கிழமை

குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

Freelancer   / 2025 மார்ச் 03 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த பெண், மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் மனைவி என்று கூறப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையின் போது பிரதிவாதியான பெண்ணிடமிருந்து இந்த போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X