Editorial / 2024 ஜூலை 02 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) கிடைத்த தகவலுக்கு அமைய நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அங்குள்ள மக்களை வெளியேற்றி விரிவான சோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை (02) காலை 10.00 மணியளவில் இந்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸார் உடனடியாக விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரை அழைத்து சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொலைபேசி அழைப்பு யாரேனும் ஒருவரின் போலி தொலைபேசி அழைப்பு எனத் தெரியவந்தால், அளிக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago