Editorial / 2021 மார்ச் 21 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குதிரை ஓடியதன் பின்னரே, அது கட்டப்பட்டிருந்த லாயம் பூட்டப்பட்டது என கூறுவார்கள்.
அவ்வாறுதான், 14 உயிர்களை பலியெடுத்ததன் பின்னர். லுணுகல- பசறை வீதியின் 13ஆவது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
வீதியோரத்தில் இரும்புகளால் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, “இது ஆபத்தான் பிரதேசமாகும்” என எழுதப்பட்ட எச்சரிக்கை விளம்பத்தையும் பொறுத்துவதற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வீதின் ஊடாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திக்கொள்வதற்காக, வீதிக்கு நடுவே (பம்பர்) போடும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், விபத்து இடம்பெற்ற இடத்தில், வீதியின் ஓரமாக விழுந்திருக்கும் பாராங்கல்லை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என தவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வனர்த்தம் ஏற்பட்ட லுணுகல-பசறை வீதியில், இவ்வாறான ஆபத்தான இடங்கள் பல இருப்பதாக, அவ்வீதியில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 6.55 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒன்பது பெண்கள் உட்பட 14 பேர், மரணமடைந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago