Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 செப்டெம்பர் 01 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளை குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.
மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சம்மாந்துறைப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னர் கூட்ட அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
6 minute ago
42 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
42 minute ago
3 hours ago
4 hours ago